மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
புதுச்சேரி: சட்டசபை பூஜ்ய நேரத்தில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரியில் 9 லட்சம் பெண்கள் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. ஆனால், அவர்கள் சென்று முறையிடுவதற்கான மகளிர் போலீஸ் நிலையங்கள் அதிகம் இல்லை. புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை 3 மகளிர் போலீஸ் நிலையங்கள் தான் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு முக்கியம். அவர்கள் தங்களது பிரச்னையை சொல்லக்கூடிய இடமாக போலீஸ் நிலையங்கள் இல்லை. எனவே, புதுச்சேரியில் மகளிர் போலீஸ் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.
காரைக்காலில் 2 மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும். புதுச்சேரியை பெண்களுக்கான பாதுகாப்பு மிக்க ஊராக மாற்ற வேண்டும். அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மக்கள் தொகையை கணக்கிடும்போது மகளிர் போலீசார் எண்ணிக்கை 1 சதவீதம் கூட இல்லை. ஆகையால், போலீசில் பெண் காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.