புத்தக சுமை குறைக்க மாணவர்களுக்கு 'டேப்லெட்' ; அமைச்சர் சாய்சரவணன்குமார் அறிவிப்பு
புதுச்சேரி: புத்தக சுமையை குறைக்க 5 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் கற்றலுடன் கூடிய கைக்கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என, அமைச்சர் சாய் சரவணன்குமார் தெரிவித்தார்.
சட்டசபை மானிய கோரிக்கை மீதான விவாத்திற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் பதில் அளித்து பேசியதாவது;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இறந்தால் இறுதி சடங்கிற்கான நிதி உதவி ரூ.15 ஆயிரத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளர்கள், சக்கிலியர்கள் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1,500ல் இருந்து ரூ. 5,000 ஆகவும், 6 முதல் 8ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு ரூ. 2,000ல் இருந்து ரூ. 8,000 ஆக உயர்த்த அரசாணை வெளியிடப்படும்.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தக்க வைக்க வழங்கும் உதவித்தொகை ரூ. 1,000ல் இருந்து ரூ. 5,000 ஆக உயர்த்த அரசாணை வெளியிடப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியின தங்கள் வீடுகளில் சோலார் மின் சக்தி அமைக்க 90 சதவீத மானியமாக அதிகப்பட்சம் ரூ. ஒரு லட்சம் வரை 200 பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
புத்தக சுமையை குறைக்க 5 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் கற்றலுடன் கூடிய கைக்கணினி (டேப்லெட்) திட்டம் விரைவில் அமலுக்கு வரும். ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தனி அடையாள அட்டை வழங்க கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வரின் கிராமம் என்ற வரைவு திட்டம் தயாரித்து, ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் 50 சதவீதத்திற்கு அதிகமாக வசிக்கும் 10 கிராமங்களை தேர்ந்தெடுத்து அடுத்த 3 ஆண்டிற்கு கிராம உள்கட்டமைப்பை மேம்படுத்த கிராமத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் பழங்குடியின 18 முதல் 40 வயதுள்ள பெண்கள் ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற கோப்பு அனுப்பட்டுள்ளது. வெளிநாட்டில் படிப்பதற்கான நிதி உதவி வழங்க வரைவு திட்டம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பபப்ட்டுள்ளது. விரைவில் அமலுக்கு வரும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களுக்கு வழங்கும் உதவித்தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
காரைக்கால், மாகி, ஏனாமில் இலவச மனைப்பட்டா வழங்க, பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரைச்சாலை அம்பேத்கர் மணி மண்டபம் ரூ. 3 கோடியில் நவீன தொழில்நுட்பத்துடன் புனரமைக்கப்படும்.
சிறுபான்மையினர் ஏழை குடும்ப பெண்களுக்கு திருமண நிதியுதவி தரப்படும். தகுதியான சிறுபான்மையினருக்கு இலவச மனைப்பட்டா தரப்படும்' என்றார்.
மேலும்
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
-
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
-
பேட்டராயர் கோவில் தேரோட்டம்: தேர் கட்டும் பணி தீவிரம்
-
நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
-
கிருஷ்ணகிரியில் பிளம்பர்களுக்கு 2 நாள் பயிற்சி பட்டறை வகுப்பு