அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்: நிராகரித்தார் ராஜ்ய சபா தலைவர்

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, சில எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த உரிமை மீறல் நோட்டீஸை, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபாவின் தலைவருமான ஜக்தீப் தன்கர் நிராகரித்தார்.
சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பேரிடர் மேலாண்மை மசோதா 2024 மீதான விவாதத்தின் போது பிரதமரின் தேசிய நிவாரண நிதி குறித்து , அமித் ஷா பார்லிமென்டில் தவறான அறிக்கைகளை முன்வைத்ததாகவும், உறுப்பினர்களின் சலுகைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டினர். உரிமை மீறல் நோட்டீசும் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக ராஜ்ய சபா தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: அமித் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
நற்பெயரைக் கெடுக்க பார்லிமென்ட் தளங்களை தவறாகப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது. பார்லிமென்ட் நெறிமுறைகள் குறித்த எஸ்.பி. சவுகான் அறிக்கையின்படி, உறுப்பினர்கள் ஒழுக்கத்தையும் தனிப்பட்ட நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்த வேண்டும்.
பார்லிமென்ட் விவாதங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது சலுகை மீறல் அல்ல. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் நிராகரிக்கப்படுகிறது.
இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.







மேலும்
-
பீகாரில் லாலுவின் காட்டாட்சி வேண்டுமா, முன்னேற்றம் தரும் அரசு வேண்டுமா; அமித் ஷா பேச்சு
-
சென்னை அணி சொதப்பல்; ராஜஸ்தான் அணி அதிரடியான தொடக்கம்
-
இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.,: பிரதமர் மோடி புகழாரம்!
-
ஷேன் வார்னே மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை: வெளியான தகவலால் பரபரப்பு
-
இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.944 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை
-
டில்லி அணிக்கு 2வது வெற்றி; ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்