'தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு': முதல்வர் ஸ்டாலின்

சென்னை: '' ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய பா.ஜ., வழங்கவில்லை எனக்கூறி வரும் 29 ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தி.மு.க., அறிிவித்து உள்ளது.
இது தொடர்பாக தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என எந்த திட்டங்களும் இல்லை. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 இடங்களில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும். நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டும் அல்ல. நாள்தோறும் நாட்டைமுன்னேற்றிடும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் பாதிக்கப்பட்ட ஏழை ஆண், பெண் தொழிலாளர்கள் பங்கேற்க செய்ய வேண்டும். உழைத்தவர்கள் ஓடாய் தேய்கிற வரை உழைப்பை உறிஞ்சிவிட்டு சம்பளத்தை தர மறுக்கிறது மத்திய அரசு. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












மேலும்
-
இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.944 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை
-
டில்லி அணிக்கு 2வது வெற்றி; ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
-
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதல்: அட்டவணை வெளியீடு
-
ஹிமாச்சல் மாநிலத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு
-
சந்தேகத்திற்கிடமான ஆயுத உரிமம்: குஜராத்தில் 21 பேர் கைது; 25 ஆயுதங்கள் பறிமுதல்
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்