பா . ம . க ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு தொடர்பாக நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் ஜெயராமன், சமூக பேரவை செயலாளர் பாலாஜி சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், திண்டிவனம் நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் கவிதா, வன்னியர் சங்க நிர்வாகிகள் சம்பத், ரவி, தினகரன், இலக்கிய பிரிவு பொன்மொழி, செயற்குழு உறுப்பினர் ராஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநாட்டில் திண்டிவனம், வானுார் தொகுதி சார்பில் 500 வாகனங்களில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement