கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: நால்வர் கைது

விருதுநகர்: திருச்சுழி அருகே வீரசோழனைச் சேர்ந்தவர்கள் அப்துல்ரகுமான், மனைவி சிவஜோதி, உறவினர்கள் மும்தாஜ் பேகம், தில்ஷாத் பேகம் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமிற்கு வந்த அவர்கள் தீக்குளிக்க முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து சென்றனர்.

இவர்களிடம் விசாரித்ததில், வீரசோழனில் உள்ள ஜமாத் நிர்வாகத்திற்கும் அப்துல்ரகுமான் குடும்பத்தினருக்கும் பிரச்னை இருந்தது. ஜமாத்தில் 15 ஆண்டுகளாக பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பதவி விலகி விட்டு, வாக்கெடுப்பு நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என அப்துல்ரகுமான் தரப்பு வலியுறுத்தியது.

மேலும் ஜமாத் நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறு வீடியோ வெளியிட்டதற்காக வீரசோழன் போலீசாரால் அப்துல்ரகுமான் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே மதுரை, கோவையில் 5 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிந்தது. இந்த நான்கு பேரையும் சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement