ரூ.120 கோடி மானியம் பெறுவதற்காக சொத்து வரி வசூலில் மாநகராட்சி தீவிரம்

கோவை; மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.120 கோடியை பெறுவதற்காக, சொத்து வரி வசூலில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

கோவை மாநகராட்சி நடப்பு நிதியாண்டில் (2024-25) ரூ.473.12 கோடி, கடந்த நிதியாண்டு (2023-24) நிலுவை ரூ.124.47 கோடி சேர்த்து ரூ.597.59 கோடி வசூலிக்க வேண்டும். நேற்று வரை ரூ.457.61 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது.

நடப்பு நிதியாண்டில், 111.1 சதவீதம் சொத்து வரி வசூலித்தால், மானியத் தொகை ரூ.120 கோடி வழங்கப்படும் என்கிற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது.

100 சதவீதத்தை மாநகராட்சி நிர்வாகம் நெருங்கி விட்டது. இரு நாட்களுக்குள் இலக்கை கடப்பதற்கு திட்டமிடப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப, மாநகராட்சி வருவாய் பிரிவினர் இரவு பகலாக வரி வசூலில், தீவிரம் காட்டிவருகின்றனர்.

Advertisement