புது அங்கன்வாடி கட்டடம் கட்ட ராயல்பட்டு கிராமத்தினர் கோரிக்கை

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம், ராயல்பட்டு கிராமத்தில், கடந்த 1982ம் ஆண்டு அங்கன்வாடி மையம் துவக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இம்மையம் செயல்பட்டு வருகிறது.
இதில் ராயல்பட்டு, விரால்பாக்கம், வெங்கூர் கூட்டு சாலை பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயில்கின்றனர். தற்போது 10 முதல் 15 குழந்தைகள் வரை, தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து உள்ளது. இதனால், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்காலிகமாக, கரும்பாக்கத்தில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான ஒரு கட்டடத்திற்கு மாற்றினர்.
தற்போது அங்கு, குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர். ஆனால், அங்கு போதிய இடவசதி, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையில், இந்த குழந்தைகளை, கரும்பாக்கம் பள்ளி வளாகத்தில் ஏற்கனவே இயங்கும் கரும்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் இணைத்து செயல்படுத்துவதாக, அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
இதற்கு குழந்தைகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, ராயல்பட்டு கிராமத்தில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றி, அங்கேயே புதிய கட்டடம் கட்டி இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக, அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு மேற்கொண்டு, ராயல்பட்டு கிராமத்தில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்டி அங்கேயே அங்கன்வாடி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம்; செந்தில் பாலாஜி
-
பாக்.,கில் இருப்பதை போல் உணர்கிறோம்: பக்வந்த் மன் அரசை விமர்சித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ.,
-
திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதுாறு: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!
-
சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
-
ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்