தேர்தலில் வெளிநாட்டு தலையீடு; இந்தியா, சீனா மீது பழி சுமத்தும் கனடா

ஒட்டாவா: சீனாவும், இந்தியாவும் தேர்தலில் தலையிட முயற்சிக்கக்கூடும் என கனடா உளவுத்துறை குற்றம் சாட்டி உள்ளது.
அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக கனடாவை சேர்க்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், பார்லிமென்டை கலைத்து, ஏப்., 28ல் தேர்தலை நடத்துவதாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இது குறித்து கனடா உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா பொதுத்தேர்தலில் சீனாவும், இந்தியாவும் தலையிட முயற்சிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ரஷ்யாவும், பாகிஸ்தானும் அவ்வாறு செய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த தேர்தல்களில் சீனாவும், இந்தியாவும் தலையிட முயற்சி செய்தது. ஆனால் அவர்களின் தலையீட்டால் எந்த பாதிப்பும் இல்லை.
தற்போதைய தேர்தலில் கனடாவின் ஜனநாயக செயல்பாட்டில் தலையிட முயற்சிக்க, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வாய்ப்புள்ளது. கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கத்தையும், திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.
வெளிநாட்டு தலையீட்டு நடவடிக்கையால் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துவது கடினம். அச்சுறுத்தல் நடவடிக்கைகள் கனடாவின் ஜனநாயக செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களின் நேர்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.








மேலும்
-
இந்தியா என்ன தர்மசாலையா: அமித் ஷா குடியேற்ற மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
-
பகிரங்கம்! 1974, 1976 அரசுகளே மீனவர் பிரச்னைக்கு காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 'புட்டு' வைத்தார்
-
பயங்கரவாதிகளுடன் மோதல் மூன்று போலீசார் உயிரிழப்பு
-
நடிகை தங்க கடத்தல் வழக்கு நகை கடைக்காரர் கைது
-
உணவு ஒவ்வாமையால் 4 குழந்தைகள் பலி உ.பி., குழந்தைகள் காப்பகத்தில் சோகம்
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம்; உயிர் பயத்தில் கணவர் திடீர் முடிவு