தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பட்டம் வழங்கினார் கவர்னர் ரவி!

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்த விழாவில், மாணவ, மாணவியருக்கு கவர்னர் ரவி பட்டச்சான்று வழங்கினார்.
சென்னையில் இருந்து விமானம் வாயிலாக புறப்பட்ட கவர்னர், காலை 9:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். காலை உணவுக்கு பின், அவர் தமிழ்நாடு வேளாண் பல்கலை வந்தார். பல்கலையில் நடந்த 45வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பங்கேற்றார்.
மாணவ, மாணவியர் 4,434 பேருக்கு கவர்னர் ரவி பட்டச்சான்று வழங்கினார். இதில், 2898 பேருக்கு தபால் வழியாக பட்டங்கள் அனுப்பி வைக்கப்படும். நிகழ்ச்சியில், சென்னை தோல் ஏற்றுமதி கழக நிர்வாக இயக்குனர் செல்வம், துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின், பிற்பகல் 3:10 மணிக்கு விமானம் வாயிலாக சென்னை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.