நெய்வேலி வாலிபருக்கு குண்டாஸ்

நெய்வேலி,: நெய்வேலியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி அடுத்த வடக்கு மேலுாரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் லட்டு (எ ) அருண்,22; இவர், கடந்த பிப்., 2 ம் தேதி அதே ஊரை சேர்ந்த ஆனந்தமுருகன் மனைவி லுார்து மேரி, 43,என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிந்து அருணை கைது செய்தார்.

இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி, போக்சோ என 5 வழக்கு உள்ளன. இவரின் தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அருணை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் அருணிடம் குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

Advertisement