சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அபு்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் நக்சலடை்டுகளை தேடும் பணி நடந்து வருகிறது, என்றனர்.
இந்த ஆண்டு என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (1)
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
25 மார்,2025 - 16:11 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விருதையில் சிக்னல் பழுது: எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
-
தோழமையை மறக்காத மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்வு
-
பணி மேற்பார்வையாளருக்கு தி.மு.க., செயலாளர் மிரட்டல்
-
ஈரானி கும்பலின் வசிப்பிடமான தானே மாவட்டத்தில் போலீஸ் குவிப்பு
-
போக்குவரத்து நெரிசலால் அவதி வாகன ஓட்டிகளுக்குள் அடிதடி
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமிக்கு 5 ஆண்டு சிறை
Advertisement
Advertisement