தி.மு.க.,வினர் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பு; அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: ஹிந்தித் திணிப்பு நடப்பதே, தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும், முதல்வர் குடும்பம் உட்பட தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதல்வர் ஸ்டாலின் கூறுவது போல ஹிந்தித் திணிப்பு அல்ல.
ஹிந்தித் திணிப்பு நடப்பதே, தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான். இந்த நிலையில், இன்று சட்டசபையில், ஹிந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மும்மொழிக் கல்வியை ஹிந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற தி.மு.க.,வின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர்.
இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 - 25ம் ஆண்டு நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26ம் ஆண்டு நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தி.மு.க., அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதல்வர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
Priyan Vadanad - Madurai,இந்தியா
25 மார்,2025 - 21:16 Report Abuse

0
0
Reply
spr - chennai,இந்தியா
25 மார்,2025 - 19:39 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25 மார்,2025 - 18:31 Report Abuse

0
0
Reply
konanki - Chennai,இந்தியா
25 மார்,2025 - 17:41 Report Abuse

0
0
Reply
konanki - Chennai,இந்தியா
25 மார்,2025 - 17:39 Report Abuse

0
0
Reply
Youvaraj V - puducherry,இந்தியா
25 மார்,2025 - 16:30 Report Abuse

0
0
Reply
J.Isaac - bangalore,இந்தியா
25 மார்,2025 - 16:24 Report Abuse

0
0
Reply
vivek - ,
25 மார்,2025 - 16:24 Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
25 மார்,2025 - 16:05 Report Abuse

0
0
N Sasikumar Yadhav - ,
25 மார்,2025 - 16:31Report Abuse

0
0
அறிஞர் அண்ணாமலை என்ற அண்ணா - ,
25 மார்,2025 - 18:58Report Abuse

0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
25 மார்,2025 - 15:22 Report Abuse

0
0
N Sasikumar Yadhav - ,
25 மார்,2025 - 16:33Report Abuse

0
0
Reply
மேலும்
-
விருதையில் சிக்னல் பழுது: எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
-
தோழமையை மறக்காத மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்வு
-
பணி மேற்பார்வையாளருக்கு தி.மு.க., செயலாளர் மிரட்டல்
-
ஈரானி கும்பலின் வசிப்பிடமான தானே மாவட்டத்தில் போலீஸ் குவிப்பு
-
போக்குவரத்து நெரிசலால் அவதி வாகன ஓட்டிகளுக்குள் அடிதடி
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமிக்கு 5 ஆண்டு சிறை
Advertisement
Advertisement