கல்லுாரி மாணவர்கள் விளையாட்டு  விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரிகளில் படிக்கும்மாணவர்களில் விளையாட்டு துறையில் சாதித்து வருபவர்கள்விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு நிலைவிடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

கல்லுாரி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள்படைப்பதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் 6 இடங்களில் செயல்படுகின்றன.

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிசேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஜன.,1ல் 17 வயது நிரம்பிய, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சேர்க்கை மற்றும்முதுகலை முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் தகுதியுடையவர் ஆவர்.

சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேருவதற்குஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

இதனை பூர்த்தி செய்து ஏப்.,6ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு ஏற்றம் செய்ய வேண்டும்.தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

சிறப்பு நிலை விளையாட்டுவிடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வுப்போட்டிகள் ஏப்.,8ல் நடைபெற உள்ளது.

மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் 951400 0777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement