கஞ்சா கும்பலின் அட்டகாசம் கண்டித்து, 28ல் பொதுக்கூட்டம்

திருப்பூர்; முருகம்பாளையம் பகுதிகளில் சமூகவிரோத செயல் அதிகரித்து வருவதை கண்டித்து, 28ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதென, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர், முருகம்பாளையம் அருகே, தந்தை மகனை கத்தியால் தாக்கிவிட்டு, பட்டாக்கத்தியுடன் நடமாடிய கஞ்சா கும்பலை, போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த, 21ம் தேதி இரவு, அங்கிருந்த கடையின் பூட்டை உடைக்கும் முயற்சியை தடுத்ததால், ஆத்திரமடைந்த கும்பல், தந்தை மற்றும் மகன் இருவரையும் வெட்டியது, மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, வீரபாண்டி போலீசார் ஐந்து பேரை கைது செய்து, பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கஞ்சா கும்பலின் அட்டகாசம் குறித்து விவாதிக்க, அனைத்துக்கட்சி கூட்டம், முருகம்பாளையம் மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில், நேற்று நடந்தது.
அ.தி.மு.க., கிளை செயலாளர் ராமமூர்த்தி, இ.கம்யூ., 4வது மண்டல செயலாளர் வடிவேல், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் கருப்புசாமி, அங்குலட்சுமி, காங்கிரஸ் வார்டு தலைவர் லட்சுமணன், தே.மு.தி.க., - வி.சி.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சியின், 41வது வார்டு, முருகம்பாளையம் சுற்றுப்பகுதிகளில், சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது. சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது.
அடாவடியை தட்டிக்கேட்டால் தொந்தரவு செய்வதாக கட்சியினர் குற்றம்சாட்டினர். அத்துமீறிய இளைஞர்களை போலீசார் கைது செய்தாலும், உடனடியாக சிலர் ஜாமீனில் எடுத்து விடுகின்றனர். அவர்களையும் விசாரிக்க வேண்டும்.
சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரி, வரும், 28ம் தேதி, கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.
மிரட்டிய 2 பேர் கைது
திருப்பூர், வீரபாண்டி, முருகம்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் வடிவேல், 42. சி.ஐ.டி.யு., வில் நிர்வாகியாக உள்ளார். நேற்று முன்தினம் வடிவேலுவும், அவரது மனைவியும், கஞ்சா கும்பலால் வெட்டப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்களை பார்க்க டூவீலரில் சென்றனர்.
அதன்பின் வீடு திரும்பி கொண்டிருந்த போது, முருகம்பாளையம், பிள்ளையார் கோவில் அருகில் வடிவேல் டூவீலரை இருவர் வழிமறித்தனர். தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில், சந்தோஷ்குமார், 26, கார்த்திக், 25 என, இருவரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!