சென்னை பெசன்ட் நகரில் மறைந்த நடிகர் மனோஜ் உடல் தகனம்

சென்னை: நேற்று சென்னையில் காலமான இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
@1brதிரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், 48, நேற்று காலமானார். சென்னை சேத்துப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தபோது, நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.
மனோஜின் உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு மனோஜ் மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். தொடர்ந்து, தகனம் செய்யப்பட்டது. இதில், மனோஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து (10)
Iniya - Viluppuram,இந்தியா
26 மார்,2025 - 19:15 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
26 மார்,2025 - 17:26 Report Abuse

0
0
Reply
ulaganathan murugesan - ,இந்தியா
26 மார்,2025 - 16:14 Report Abuse

0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
26 மார்,2025 - 15:23 Report Abuse

0
0
Reply
மோகன் - கென்ட்,இந்தியா
26 மார்,2025 - 15:05 Report Abuse

0
0
Rajathi Rajan - Thiravida Naadu,இந்தியா
26 மார்,2025 - 17:05Report Abuse

0
0
மோகன் - கென்ட்,இந்தியா
27 மார்,2025 - 03:39Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
26 மார்,2025 - 14:56 Report Abuse

0
0
Reply
எவர்கிங் - ,
26 மார்,2025 - 14:43 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
26 மார்,2025 - 14:16 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நிலநடுக்கத்திற்கு மத்தியில் பூத்த மலர்; சாலையில் பெண்ணுக்கு பிரசவம்
-
போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு
-
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை
Advertisement
Advertisement