5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 28 முதல் 30ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் வாட்ட தொடங்கி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 28 முதல் 30ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் (மார்ச் 26) நாளையும் (மார்ச் 27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வரும் 28ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 29 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 28 முதல் 30ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக் கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளது.
மேலும்
-
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை
-
எக்ஸ் சமூக வலைதளத்தை தனக்குத்தானே விற்றார் எலான் மஸ்க்!
-
தொகுதி மறுசீரமைப்பின் மூலம் நெரிக்கப்படும் குரல்; முதல்வர் ஸ்டாலின்