கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!

5


சென்னை: கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது. அ.தி.மு.க., தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது சுவாரஸ்யமான விவாதத்தை ஏற்படுத்தியது.


சட்டசபையில் இன்று (மார்ச் 26) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. அப்போது கூட்டணி கணக்கு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

அ.தி.மு.க., கடம்பூர் ராஜு:
அ.தி.மு.க., என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான்.

அமைச்சர் தங்கம் தென்னரசு




கணக்கு கேட்ட கட்சி தான். ஆனால், இப்போது அ.தி.மு.க., தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலாக தெரிவித்தார்.



இதற்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 'எம்ஜிஆர்., ஜெயலலிதா வழியில் இ.பி.எஸ்., போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்' என பதில் அளித்தார்.
இவ்வாறு உரையாடல் நடந்தது.

Advertisement