ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!

திருநெல்வேலி: ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18ம் தேதி அதிகாலை, 5:40 மணிக்கு மசூதியில் தொழுகையை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 26) ஜாஹிர் உசேன் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், 'டி.ஜி.பி.,- சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்பி தற்போதைய நிலை குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.

மேலும்
-
போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு
-
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை
-
எக்ஸ் சமூக வலைதளத்தை தனக்குத்தானே விற்றார் எலான் மஸ்க்!