ஜே.எஸ்.டபிள்யு சந்தை மதிப்பில் முதலிடம்

மும்பை:பங்குச் சந்தையில் சந்தை மதிப்பு அடிப்படையில், முன்னணி நிறுவனங்களான ஆர்செலர் மிட்டல், நிப்பான் ஸ்டீல் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, உலகின் அதிக மதிப்புள்ள ஸ்டீல் நிறுவனமாக, ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல் மாறி உள்ளது.

ஜே.எஸ்.டபிள்யு குழுமத்தின் அங்கமான,ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல், நிப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றுள்ளது.

நடப்பாண்டு மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள், 18 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.59 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.



நிறுவனம் சந்தை மதிப்பு (ரூ., லட்சம் கோடியில்)

ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல் 2.590

ஆர்செலர் மிட்டல் 2.093

நிப்பான் ஸ்டீல் 2.049

Advertisement