பிரிட்டானியா நிறுவனத்தில் வேலைநிறுத்தம்

புதுடில்லி:குஜராத்தில் உள்ள பிரிட்டானியா ஆலையில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால், இந்நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன.

பிரிட்டானியா ஆலையில், திங்களன்று மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தத்தால் நிறுவனத்தின் பங்குகள், செவ்வாயன்று ஒரு சதவீத சரிவை சந்தித்தன. வேலைநிறுத்தப் போராட்டத்தால் வினியோகத்தில் ஏற்படும் இடையூறுகளை மதிப்பீடு செய்து, சீரான வினியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வேலைநிறுத்தத்தைக் கைவிட, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement