தொழில் முன்னேற்றத்துக்காக 108 பால் குடம் எடுத்த பக்தர்கள்

திருப்பூர்; தொழில் முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள் நலன் வேண்டி, முருகப் பெருமானுக்கு, 108 குடம் பாலாபிேஷகம் செய்விக்கப்பட்டது.

திருப்பூர், நல்லுாரில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கந்தசஷ்டி பாராயண குழு சார்பில், திருப்பூரில் தொழில் முன்னேற்றத்துக்காகவும், மக்கள் நலன் வேண்டியும், 60வது தொடர் கந்த சஷ்டி கவச பாராயணத்தை முன்னிட்டு, முருக பெருமானுக்கு, 108 பால் குடம் எடுத்தல் நேற்று நடந்தது.

ஏராளமான பெண்கள் பங்கேற்று நல்லுார் பஸ் ஸ்டாப்பில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால் குடத்தை எடுத்து, முக்கிய வீதி வழியாக விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து, முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், தொடர் கந்த சஷ்டி கவசம் பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. அதன்பின், நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement