வீடு சூறை இருவர் கைது

திருப்பூர்; திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, ரங்காநாதபுரத்தை சேர்ந்தவர் சேகர், 40; பில்டிங் காண்ட்ராக்டர். இவருக்கு சொந்தமான வீட்டில் அலெக்ஸ் என்பவர் குடியிருந்தார்.

வீட்டை காலி செய்வது தொடர்பாக, இருவருக்குமிடையே பிரச்னை இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

இச்சூழலில் நேற்று சேகர் வெளியே சென்றிருந்த நிலையில், அலெக்ஸ், 24 தனது நண்பர் சக்திவேல், 26 உடன் மது அருந்தி விட்டு, போதையில், அரிவாளால் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து டிவி, சேர் மற்றும் வெளியே இருந்த சின்டெக்ஸ் டேங்க், குளியலறை என அனைத்தையும் சேதப்படுத்தினார்.

சேகர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement