அதிகாரி மாறி விட்டார் போன் எண் மாறவில்லை

பல்லடம்; பல்லடம் சார்-பதிவா ளர் அலுவலகத்தில், பணியிடம் மாறிய அதிகாரியின் மொபைல் எண்ணுடன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
வில்லங்க சான்று நீண்ட நாட்களாகியும் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி, பல்லடத்தை சேர்ந்த ஒருவர், அலுவலக அறிவிப்பு பலகையில் இருந்த, மாவட்ட பதிவாளர் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றார்.
ஆனால், அறிவிப்பு பலகையில் உள்ள மொபைல் எண், முந்தைய மாவட்ட பதிவாளருடையது என்றும், அவர் பணியிடம் மாறிச் சென்று இரண்டு ஆண்டுகள் ஆவதாகவும் தகவல் கிடைத்தது.
இது குறித்து புகார்தாரர் கூறுகையில், 'பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தில், வில்லங்க சான்று, நகல் வழங்கும் பணிகள் மிகவும் மந்தமாக உள்ளன. மாவட்ட பதிவாளரிடம் தெரிவிக்கலாம் என்றால், அறிவிப்பு பலகையில் பழைய மொபைல் எண் உள்ளது.
மக்கள் புகார் அளிக்க வசதியாக, பதிவுத்துறை தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளரின் சரியான மொபைல் போன் எண்களை, அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அதிகாரிகள் மாறினாலும், தொடர்பு கொள் ளும் எண்கள் மாறாத வகையில், அரசு வழங்கிய மொபைல் மற்றும் தொலைபேசி எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,' என்றார்.
மேலும்
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு