போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பன்னீர்செல்வம்

திருவேற்காடு,
திருவேற்காடு நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சிவன் கோவில் பிரதான சாலை மிகவும் குறுகலானது.
கடந்த ஒரு மாதமாக மின் வாரியம் சார்பில் 'கேபிள்' பதிக்கும் நடந்து வருகிறது. இதனால், சாலை மேலும் குறுகலாகி, ஒரு வழி பாதை போல மாறி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திடீரென கனரக வாகனங்கள் சென்றால், இருபுறமும் 1 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.
நெரிசல் ஏற்படும் நேரத்தில், போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவதில்லை. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவேற்காடில் உள்ள வேதபுரீஸ்வரர் சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை திரும்பி செல்லும் போது, அவரது கார் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ஊர்ந்து சென்றது.
மேலும்
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு