ரத்தினங்கி சேவை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில், நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, முருகனுக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு பாலாபிஷேகமும் நடந்தது.

தொடர்ந்து, மூலவர் மலர் அலங்காரத்திலும், உற்சவர் ரந்தினங்கி சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில், பொங்கல், மோர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்படுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றம் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement