வீடு, கல்விக்கடன் உச்சவரம்பு உயர்வு ஆர்.பி.ஐ., புதிய விதி ஏப்.,1 முதல் அமல்
புதுடில்லி:முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கும் விதிகளில், கடன் பெறுபவர்களுக்கு சாதகமாக, ரிசர்வ் வங்கி சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள ஆர்.பி.ஐ., இந்த மாற்றங்கள் வரும் ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
இதன்படி, வீடு மற்றும் கல்விக்கடனுக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறைகளின்படி வீட்டுக் கடன், அந்த வீடு அமைந்துள்ள பகுதி அல்லது நகரத்தின் மக்கள் தொகையைப் பொறுத்து வழங்கப்படும். கல்விக்கடன் உச்ச வரம்பு 20 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவின் கீழ் நிறுவ னங்களுக்கு, 35 கோடி ரூபாய் வரை கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் 10 லட்சம் ரூபாய் வரை பெற முடியும்.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், தங்களின் சரிசெய்யப்பட்ட நிகர வங்கி கடனில் 60 சதவீதம் முன்னுரிமை துறைகளுக்கு கடனாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 50,000 ரூபாய் வரையிலான முன்னுரிமை துறை கடன்களுக்கு, ஆய்வுக் கட்டணம் உட்பட எந்த விதமான சேவைக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., உத்தரவிட்டுள்ளது.
50க்கும் மேல் 5010 - 50 லட்சம் 4510க்கு கீழ் 35
துறைகள் விவசாயம் எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதி கல்வி வீடு, மனை ↓சமூக உள்கட்டமைப்பு ↓புதுப்பிக்கத்தக்கஎரிசக்திவங்கிகள் தாங்கள் வழங்கும் மொத்த கடனில் குறிப்பிட்ட சதவீதத்தை இத்துறைகளுக்கு வழங்குவது கட்டாயமாகும்
மேலும்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!
-
பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் திறக்கிறார் பிரதமர் மோடி!