பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

26

புதுடில்லி: பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.


@1br2021ம் ஆண்டு உ.பி.யைச் சேர்ந்த 11 வயது சிறுமியை இரண்டு வாலிபர்கள் லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவானது. இந்த வழக்கில் அண்மையில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ராம்மனோகர் நாராயண் மிஸ்ரா தீர்ப்பளித்தார்.


தீர்ப்பில், பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. சிறுமியின் ஆடைகளை கிழித்து காயங்கள் ஏற்படுத்தவே முயன்றனர். இது பாலியல் பலாத்கார முயற்சியாக பார்க்க முடியாது. மார்பகத்தை பிடித்து இழுப்பதை கற்பழிப்பு முயற்சி என்று கூற முடியாது என்று கூறி, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அவரின் இந்த தீர்ப்புக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.


இந்நிலையில், அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்நிறுத்தி வைத்துள்ளது. நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறி உள்ளதாவது:


இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய சம்பவம். உணர்ச்சியற்ற மனநிலையில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதை இது காட்டுகிறது. தீர்ப்பை எழுதியவருக்கு உணர்ச்சியே இல்லை. இதை சொல்வதற்கு எங்களுக்கு வேதனையாக உள்ளது என்று கூறினார்.

Advertisement