பழுதான வாகனங்கள் நிறுத்துமிடமான மாத்துார் சர்வீஸ் சாலை

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத், சென்னை -- திருச்சி, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.
ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல ஆயிரக்கணக்காக தொழிற்சாலை பேருந்து, கனரக வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.
தவிர, மாத்துார், வல்லக்கோட்டை, வல்லம், வடகால், சென்னக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சிங்கபெருமாள் கோவில், காஞ்சிபுரம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், மாத்துாரில் உள்ள தனியார் வாகன பழுது பார்ப்பு கடைக்கு வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள பழுதான வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!
-
பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்