'சொத்து வரி உயர்வில் மட்டும் டில்லி பேச்சை கேட்பது ஏன்?'
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - வேலுமணி: தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் நேரு: 2018 அ.தி.மு.க., ஆட்சியில், 50, 100, 200 சதவீதம் என, சொத்து வரி உயர்த்தப்பட்டது; தேர்தல் வந்ததால் நிறுத்தப்பட்டது. 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி சொத்து வரியை உயர்த்த வேண்டும்.
அப்படி உயர்த்தினால் தான், நிதியை தருவோம் என, மத்திய அரசு கூறியது. அதனாலேயே சொத்து வரியை உயர்த்தும் நிலை ஏற்பட்டது. பிற மாநில மாநகரங்களை ஒப்பிடும்போது, சென்னையில் தான் சொத்து வரி குறைவாக உள்ளது.
வேலுமணி: மத்திய அரசு சொல்வது எதையும் கேட்காத தி.மு.க., அரசு, மத்திய அரசு சொல்கிறது என்பதற்காக சொத்து வரியை மட்டும் ஏன் உயர்த்துகிறீர்கள்?
அமைச்சர் நேரு: 2018ல் அ.தி.மு.க., ஆட்சியில் உயர்த் தப்பட்டதில், நான்கில் ஒரு பங்குதான் இப்போது உயர்த்தியுள்ளோம். மத்திய அரசு நிதி தரும் என்று நினைத்து செய்தோம். ஆனால், மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை, நீங்களே அறிவீர்கள்.
மேலும்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!
-
பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் திறக்கிறார் பிரதமர் மோடி!