நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முயற்சி ரூ.52 கோடியில் மழைநீர் சேகரிப்பு திட்டம்

சட்டசபையில் அமைச்சர் நேரு வெளியிட்ட அறிவிப்பு:

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள், 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்

* பாதுகாப்பாக நடைபாதைகளை பயன்படுத்தும் வகையில், வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தில், பேருந்து தட சாலைகளில், 200 கி.மீ., நீளத்திற்கு, 200 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதைகள் அமைக்கப்படும்

* வெள்ளத்தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள், 95 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பு சுவர் அமைத்து, குப்பை தேங்காமல் இருக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்

* நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, 52 கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்

* ஏரிகள், குளம் சீரமைத்து, அதன் கொள்ளவை அதிகரிக்கவும், சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பை தவிர்க்கவும், 120 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்

* மாநகராட்சி பகுதிகளை பசுமையாக்கி இயற்கை சூழலை ஏற்படுத்த, 60 கோடி ரூபாய் மதிப்பில், 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்

* அனைத்து மண்டலங்களிலும், 45 கோடி ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்

* மாநகராட்சி மயான பூமிகளில், 60 கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்

* கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி கூடங்கள், 60 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்

* பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பு வாயிலாக, நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்

* சென்னையில் மைய பகுதிகளில், மிகவும் பழமையான கழிவுநீர் கட்டமைப்புகள், 740.37 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படும்.

* புழலிலுள்ள பழைய, 30 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 430.12 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும்

* அனைத்து கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்ளில் அளவுமானிகள், 30 கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்படும்

* தாம்பரம் மாநகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை மேம்படுத்தும் வகையில், 30 கோடி ரூபாயில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement