சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

தண்டேவாடா: சத்தீஸ்கரில், பஸ்தார் மண்டலத்துக்கு உட்பட்ட தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்ட எல்லை வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினருடன், மத்திய ரிசர்வ் படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Advertisement