மின் மயான வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு

வாலாஜாபாத், :வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

வாலாஜாபாத் பேரூராட்சியில், உயிர் நீத்தோர் சடலங்களை பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரியம்மன் கோவில், சேர்க்காடு மற்றும் கீழாண்டை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மயானங்களில் அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்த மயானங்கள் பாலாற்றங்கரையொட்டி உள்ளதால், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நேரங்களில், மண்ணில் புதைத்த சடலங்கள் தண்ணீரில் அடித்து செல்லும் நிலை உள்ளது.

அம்மாதிரியானசமயங்களில் தண்ணீர் மாசு அடைவதோடு, பாலாற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இறந்தவர்களைதிறந்தவெளியில் எரிக் கப்படுவதால், சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, காற்று மாசடைந்து, போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள மயானங்களில் இறந்தோர் நினைவாக கல்லறைகள் அதிகம் கட்டப்படுவதால், தொடர்ந்து இடம்பற்றாக்குறை பிரச்னை நிலவுகிறது.

அதேபோன்று, வாலாஜாபாத் சுற்றி உள்ள ஒட்டிவாக்கம் உள்ளிட்ட சில கிராமங்களிலும், மயானத்தில் இடம் பற்றாக்குறை பிரச்னை உள்ளது.

இதனால், வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்காக, வாலாஜாபாத் பகுதியில் மின் மயானம், நவீன எரிவாயு தகன மேடை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்திவருகின்றனர்.

இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாக அலுவலர் ஒருவர் கூறியதாவது:

வாலாஜாபாதில், மின் மயானம் ஏற்படுத்துதல் குறித்து ஏற்கனவேபேரூராட்சி கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.

மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கு பின், அதற்கான நிதி ஆதாரம் மற்றும் இடம் தேர்வு போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement