வீட்டுமனை பட்டா கேட்டு மனு


வீட்டுமனை பட்டா கேட்டு மனு


ஓசூர்:ஓசூர் அருகே, பத்தலப்பள்ளி முஸ்லீம் காலனியில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 3 தலைமுறையாக வசிக்கின்றன. இங்குள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் வருவாய்த்துறை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், பத்தலப்பள்ளி முஸ்லீம் காலனியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இ.கம்யூ., கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் மாதையன் ஆகியோர் தலைமையில், நேற்று காலை சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, சப் கலெக்டர் பிரியங்காவிடம், வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு வழங்கினர்.

Advertisement