பேட்டராயர் கோவில் தேரோட்டம்: தேர் கட்டும் பணி தீவிரம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பழமையான சவுந்தர்யவல்லி சமேத பேட்டராயர் கோவில் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா கடந்த, 17ல் பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

அடுத்த மாதம், 9 இரவு, 9:00 மணிக்கு ராமபாணம், 10 காலை, 10:30 மணிக்கு தேரோட்டம், 11ல், பல்லக்கு உற்சவம் மற்றும் வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி, தமிழக மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், தேர் கட்டும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement