ஆவின் முகவர்களுக்கு250 டிஜிட்டல் போர்டுகள்
ஆவின் முகவர்களுக்கு250 டிஜிட்டல் போர்டுகள்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 250 ஆவின் முகவர்களுக்கு ஆவின் டிஜிட்டல் போர்டு வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் மற்றும் தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் இணைந்து, ஆவின் பால் மற்றும் பால்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.
பால் வளத்துறை துணை பதிவாளர் விஷ்வேஸ்வரன் தலைமை வகித்தார். ஆவின் பொதுமேலாளர் சுந்தர வடிவேல் முன்னிலை வகித்தார். இதில், ஆவின்பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது குறித்து முகவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த, 250 ஏஜன்டுகளுக்கு, ஆவின் டிஜிட்டல் போர்டு வழங்கப்பட்டது. மேலும், பால் கசிவு, தயிர் கெட்டு போதல், நேரத்திற்கு பொருட்கள் வருவதில் தாமதம் குறித்த ஏஜன்டுகளின் குறைகள் சரிசெய்யப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரன், பால் பதப்படுத்தும் பிரிவு மேலாளர் சுஜா, தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் கவிப்பிரியா, மாநில நுகர்வோர் சங்க மாநில பொதுச்
செயலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி தர மறுப்பு: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு