உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்

31

லக்னோ: '' 100 ஹிந்துக்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 100 ஹிந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியாது. இதற்கு வங்கதேசம் உதாரணம். முன்பு பாகிஸ்தான் இதற்கு உதாரணமாக இருந்தது.


உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருக்க முடியும். 2017க்கு முன்பு, இங்கு ஹிந்துக்களின் வீடு மற்றும் கடை எரிக்கப்பட்டால், அதேபோன்று முஸ்லிம்களின் கடை, வீடு எரிக்கப்பட்டது. ஆனால், 2017 ல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement