மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்

சென்னை: அ.தி.மு.க., அமைப்புச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ். அறிக்கை:
அனைவராலும் 'கானா' என்று பாசத்தோடு அழைப்பவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருங்கிப் பழகியவரும், ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவருமான கருப்பசாமி பாண்டியன் அவர்கள், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர். 1998ல் திருநெல்வேலியில் கழக வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதற்கு, இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை.
கருப்பசாமி பாண்டியன் அவர்களை இழந்து வாடும், அவரது மகனும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளருமான
வி.கே.பி. சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
நிலநடுக்கத்திற்கு மத்தியில் பூத்த மலர்; சாலையில் பெண்ணுக்கு பிரசவம்
-
போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு
-
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை