லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை

புதுடில்லி: '' லோக்சபாவில் என்னை பேச அனுமதிக்கவில்லை'', என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். அதேநேரத்தில் அவையில் விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
இடமில்லை
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: பார்லிமென்டில் என்ன நடக்கிறது என புரியவில்லை. லோக்சபாவில் பேசுவதற்கு நான் வாய்ப்பு கேட்டேன். ஆனால், வாய்ப்பு வழங்காமல் கிளம்பி சென்று விட்டார். அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றைச் சொன்னார். தேவையில்லாமல் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபாவில் பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்குவது வழக்கம். எப்போது எல்லாம் நான் எழுந்து நின்றாலும், நான் பேசுவதை தடுக்கின்றனர். இதனால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்துள்ளேன். 7-8 நாட்களாக பேச அனுமதிக்கப்படவில்லை. இங்கு ஜனநாயகத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடமில்லை. மஹா கும்பமேளா குறித்தும், வேலைவாய்ப்பின்மை குறித்தும் பேச விரும்பினேன். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. சபாநாயகரின் அணுகுமுறை குறித்து புரியவில்லை. ஆனால், நாங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. என்றார்.
எதிர்பார்ப்பு
இது தொடர்பாக லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: இந்த சபையின் புனிதத்தன்மை மற்றும் உயர்ந்த மரியாதையை நீங்கள்( ராகுல்) நிலைநிறுத்துவீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல எம்.பி.,க்களின் நடவடிக்கை அவ்வாறு இல்லை என்பதற்கு பல சம்பவங்கள் உள்ளன. தந்தைகள், மகள்கள், தாயார்கள், மனைவி மற்றும் கணவன் இந்த சபையின் உறுப்பினர்களாக இருந்து உள்ளனர். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் விதிப்படி நடக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

















மேலும்
-
நிலநடுக்கத்திற்கு மத்தியில் பூத்த மலர்; சாலையில் பெண்ணுக்கு பிரசவம்
-
போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு
-
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை