தேர்வு மையத்திற்கு கத்தியுடன் வந்த மாணவர்கள்

கடலுார்:கடலுாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மையத்திற்கு, சைக்கிள் செயின், கத்தியுடன் வந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. தேர்வு கடைசி நாளான நேற்று, தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கடலுார் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பள்ளி தேர்வு மையத்தில், சோதனையின் போது மாணவர்களிடம் சைக்கிள் செயின், சிறிய கத்தி இருந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேர்வு முடிந்த பிறகு, அந்த மாணவர்களுக்கு புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

Advertisement