தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : நுாறுநாள் வேலைத்திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க., சார்பில் மாவட்ட முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகங்கை அருகே வாணியங்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரைஆனந்த், நகராட்சி கவுன்சிலர் ஜெயகாந்தன், நிர்வாகிகள் ஜெயக்குமார், ராமதாஸ், திலகவதி, சிங்கமுத்து கலந்து கொண்டனர். மதகுபட்டியில் ஒன்றிய செயலாளர் முத்து ராமலிங்கம், காரைக்குடி அருகே சூரக்குடியில் அமைச்சர் பெரிய கருப்பன், சிங்கம்புணரி ஒன்றியம் காளாப்பூரில் ஒன்றிய செயலாளர் பூமணி மு. சூரக்குடியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பால சுப்பிரமணியன், திருப்புவனத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், மானா மதுரையில் ஒன்றிய செயலாளர் துரைராஜாமணி, திருக்கோஷ்டியூரில் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக பாவனக்கோட்டையில் ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement