தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை
மல்லசமுத்திரம்:தென்னை ஓலையில் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து, மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயப்பிரபா யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மல்லசமுத்திரம் வட்டாரத்தில், தென்னை மரங்களின் ஓலைகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, மஞ்சள் நிற பாலித்தின் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள், 5 அடிக்கு, 1.5 அடி என, ஏக்கருக்கு, 8 வீதம், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மேலும், தாக்கப்பட்ட மரத்தின் கீழ்மட்ட ஒலைகளின் உட்பகுதியில் படுமாறு, மிகவேகமாக தண்ணீரை விசை தெளிப்பான் கொண்டு பீய்ச்சி அடித்து, ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம்.
வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி திறன் கொண்ட, 'என்கார்சியா' குளவியின் கூட்டுப்புழு உள்ளடங்கிய தென்னை ஓலைகள் ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகள் மீது, 10 மர இடைவெளியில் வைத்தும் கட்டுப்படுத்தலாம். கிளரசோபிட் என்ற பச்சை கண்ணாடி, இறக்கை பூச்சியின் இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம்.
சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலால், தென்னை ஓலையில் ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த மைதா மாவு கரசலை ஒரு லிட்டர் தண்ணீரில், 25 கிராம் மற்றும் ஒட்டும் திரவம், 1 மி.லி., சேர்த்து கீழ் இலை அடுக்குகளின் மேல் படுமாறு தெளித்தால், 3 முதல், 5 நாட்களில் இலைகளில் படிந்திருந்த கரும்பூசணங்கள் வெயிலில் காய்ந்து உதிர்ந்து விடும்.
இயற்கை எதிரிகளான என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் மற்றும் கிரைசோபிட் இரைவிழுங்கிகள் தோப்புகளில் இயற்கையாக இனப்பெருக்கம் அடைய சாமந்தி பூ, சூரியகாந்தி, தட்டைப்பயறு போன்ற பயிர்களை தென்னந்தோப்புகளில் பயிர் செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்
-
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி தர மறுப்பு: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு