நெற்பயிர் மீது ஆசிட்தெளித்தவருக்கு 'காப்பு'



நெற்பயிர் மீது ஆசிட்தெளித்தவருக்கு 'காப்பு'


வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியம், ஓ.சவுதாபுரம் பஞ்., கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி, 65; விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மகேஷ்கண்ணன், 51. இவர்கள் இருவருக்கும், விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், மகேஷ்கண்ணன், பாப்பாத்தியின் நெல் வயலுக்கு சென்று, ஆசிட்டை ஊற்றி நெற்பயிர்களுக்கு தெளித்து சேதப்படுத்தியுள்ளார். இதையறிந்த பாப்பாத்தி, மகேஷ்கண்ணனிடம் கேட்டபோது, மண்வெட்டியால் அடித்து கொன்றுவிடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாப்பாத்தி அளித்த புகார்படி, வெண்ணந்துார் போலீசார், மகேஷ்கண்ணனை கைது செய்தனர்.
கலெக்டர் உத்தரவால்

Advertisement