வீடு புகுந்து 7 சவரன் நகை, பணம் கொள்ளை

அவலுார்பேட்டை : வளத்தி அருகே வீடு புகுந்து 7 சவரன் நகை, 48 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களைகொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வளத்தி அடுத்த பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் சம்பத், 68; ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர். இவரது மனைவி மலர்விழி, 61; இவர் 10 நாட்களுக்கு முன் சென்னைக்கு சென்றிருந்தார்.

இரவு சம்பத் மட்டும் வீட்டில் தனியாக துாங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து பார்த்த போது, பின் பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே அறைக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 7 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 48 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement