பி.ஓய் 01 டி.இ., வரிசையில் பேன்சி எண்கள் ஏலம்

புதுச்சேரி : போக்குவரத்துத் துறையின் பி.ஒய் 01 டிஇ (PY 01 DE) (புதுச்சேரி) வரிசையில் உள்ள எண்களுக்கான ஏலம் வரும் 2ம் தேதி நடக்கிறது.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒய் 05 டிஇ (PY 01 DE) (புதுச்சேரி) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில் வரும் 2ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலம் விட இருக்கிறது.

ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவு சொல்லை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் 'New public user' கிளிக் செய்வதன் மூலமாக இன்று (26ம் தேதி) முதல் 1ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே 2ம் தேதி காலை 11:00 மணி முதல் 4:30 மணி வரை நடக்கும் ஏலத்தில் பங்கு பெறலாம். அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை இன்று (26ம் தேதி) முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

இது சம்பந்தமான இதர விவரங்களை போத்துவரத்துத் துறை அலுவலகத்தின் 0413 2280170 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட எண் முன்பதிவு செய்யப்பட்ட வாகனம், அந்த எண்ணை முன்பதிவு செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்ய தவறினால், அத்தகைய முன்பதிவு செயலிழந்துவிடும். அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் அவரது உரிமையை இழந்துவிடும்.

ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் 'ஆன்லைன் பேமண்ட்' மூலம் வாயிலாக மட்டும் பெறப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement