கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 43. கட்டட தொழிலாளி. தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு வருவதால் குடும்பத்தில் பிரச்னை இருந்தது. எட்டு மாதங்களாக மனைவியுடன் பிரிந்து, தாயுடன் வசித்து வந்தார்.

மனைவியை பிரிந்த மனஉளைச்சலில் இருந்து வந்தவர், சில நாட்களாக அதிகளவில் குடித்து வந்தார். கடந்த 24ம் தேதி காலை பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் இரவு, நந்தியம்பாக்கம் முருகர் கோவில் அருகே உள்ள குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசாரின் விசாரணையில் கோபி என தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement