கலவரக்காரர்கள் வீட்டை இடிக்க 1,000 பொக்லைன் வாங்குவேன் எத்னால் அதிரடி

பாகல்கோட், : ''நான் முதல்வரானால் கலவரக்காரர்கள் வீட்டை இடிக்க 1,000 பொக்லைன் இயந்திரங்களை வாங்குவேன்,'' என, பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.
பாகல்கோட், குலேகுடா நகரில் நேற்று முன்தினம் இரவு சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா நடந்தது.
இதில், பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் பேசியதாவது: மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போதும் சட்டம்- - ஒழுங்கு மோசமாக இருந்தது. இப்போது அதை விட அதிகமாகி உள்ளது. சட்டம் -- ஒழுங்கு சீராக இருந்தால் தான் மக்களால் நிம்மதியாக இருக்க முடியும்.
நான் முதல்வராக இருந்தால் 1,000 பொக்லைன் இயந்திரங்களை வாங்கி ஒவ்வொரு தாலுகாவிற்கும் தலா 35 பொக்லைன்களை அனுப்பி வைப்பேன். கலவரக்காரர்கள் வீட்டை இடித்து அகற்றும்படி உத்தரவிடுவேன்.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அப்பாவி ஹிந்துக்கள், போலீஸ்காரர்கள் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள், எவ்வளவு திமிர் பிடித்தவர்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. நம் மாநிலத்திலும் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை. தங்களது பரிதாபமான நிலையை என்னிடம் கூறினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
வீட்டு கடன் பெற ரூ.15,000 லஞ்சம் கூட்டுறவு செயலர் உட்பட இருவர் கைது
-
பஸ் நிறுத்தங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த பயணியர் எதிர்பார்ப்பு
-
சென்னை - திருப்பதி சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அபாயம்
-
செய்யூர் பகுதியில் 'ஓவர்லோடு' லாரிகள் அதிகாரிகள் கடிவாளம் போடுவது அவசியம்
-
தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தாக கடக்கும் மக்கள்
-
அச்சிறுபாக்கம் ஆதார் மையத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை