ஸ்கிராம்பிளர் ஐகான் டார்க் டுகாட்டியின் 'பிளாக் ப்யூட்டி'

'டுகாட்டி' நிறுவனம், 'ஸ்கிராம்பிளர் ஐகான் டார்க்' என்ற சிறப்பு எடிஷன் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்தியாவில், டுகாட்டியின் குறைந்த விலை பைக்காகும். 'ஸ்கிராம்பிளர் ஐகான்' பைக்கின் விலையை விட, இந்த பைக் 94,000 ரூபாய் குறைவு.

பைக் முழுவதும், 'மேட் பிளாக்' நிறத்தில் வந்துள்ளது. அலுமினியத்தால் ஆன பக்கவாட்டு பேனல்கள் மற்றும் இன்ஜின் டைமிங் பெல்ட், வட்ட வடிவ எல்.இ.டி., ஹெட் லைட்டுகள், ஹெட் லைட்டின் மீது 'எக்ஸ்' வடிவ டிசைன், 'நீர் துளி' வடிவம் கொண்ட பெட்ரோல் டேங்க், அகலமான ஹாண்டில் பார், கருப்பு நிறத்தில் இன்ஜின் ஆகியவை பைக்கை ஆக்ரோஷமாக காட்டுகிறது.

இந்த பைக்கில், ஏற்கனவே உள்ள 803 சி.சி., எல் - டுவின் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. இதர 800 சி.சி., பைக்குகளை ஒப்பிடுகையில், இந்த பைக்கின் எடை வெறும் 176 கிலோவாக உள்ளது. சீட் உயரம், 795 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 எம்.எம்., பெட்ரோல் டேங்க் 13.5 லிட்டராக உள்ளது.

முன்புற யூ.எஸ்.டி., போர்க் மற்றும் அட்ஜஸ்டபில மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், 330 மற்றும் 245 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், 18 மற்றும் 17 அங்குல அலாய் சக்கரங்கள், பிரெலி டயர்கள், ரைட் பை ஒயர் வசதி, டி.எப்.டி., டிஸ்ப்ளே ஆகியவை இதில் உள்ளன. பாதுகாப்புக்கு, ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.


விபரக்குறிப்பு:



இன்ஜின் - 803 சி.சி., எல் - டுவின் சிலிண்டர், ஏர் கூல்டு

பவர் - 73 ஹெச்.பி.,

டார்க் - 65.2 என்.எம்.,

டாப் ஸ்பீடு - 195 கி.மீ.,

(0 - 100 கி.மீ.,) பிக்கப் - 4.1 வினாடி


விலை: ரூ.9.97 லட்சம்

Advertisement