'ஒமேகா செய்கி என்.ஆர்.ஜி.,' இ.வி., ஆட்டோ குறைந்த எடை, அதிக ஆற்றல்

மின்சார வாகன உற்பத்தியாளர் 'ஒமேகா செய்கி' நிறுவனம், 'என்.ஆர்.ஜி.,' என்ற புதிய மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை, பேட்டரி உற்பத்தி செய்யும் 'கிளீன் எலக்ட்ரிக்' நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது.

இந்த ஆட்டோ, பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்த முடியும்.

இதில், 15 கி.வாட்.ஹார்., லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. ஒரே சார்ஜில், 300 கி.மீ., வரை பயணிக்க முடியும்.

வெப்பத்தை சீராக வைக்க, பேட்டரிக்கு 'லிக்விட் கூலிங்' அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த எடையில், அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த பேட்டரிக்கு, 'கிளீன் எலக்ட்ரிக்' நிறுவனம், காப்புரிமை பெற்றுள்ளது.

45 நிமிடம் பாஸ்ட் சார்ஜிங் செய்தால், 150 கி.மீ., வரை பயணிக்கலாம். இந்த ஆட்டோவுக்கு, 5 ஆண்டு அல்லது 2 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

இதர அம்சங்கள் மற்றும் தகவல்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வரும் நிதியாண்டில், 5,000 ஆட்டோக்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

விலை: ரூ.3.55 லட்சம்




விபரக்குறிப்பு



பேட்டரி - 15 கி.வாட்.ஹார்.,

மோட்டார் பவர் - 17.17 ஹெச்.பி.,

டார்க் - 430 என்.எம்.,

டாப் ஸ்பீடு - 47 கி.மீ.,

ரேஞ்ச் - 300 கி.மீ.,

Advertisement