ஹீரோ பைக்குகள் முன்பதிவு துவக்கம்

'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனத்தின் 'எக்ஸ்ட்ரீம் 250ஆர்' மற்றும் 'எக்ஸ்பல்ஸ் 210' ஆகிய பைக்குகளின் முன்பதிவு துவங்கி உள்ளன. வினியோகம், விரைவில் துவங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எக்ஸ்ட்ரீம் 250ஆர்
இது, இந்நிறுவனத்தின் சக்தி வாய்ந்த பைக்காகும். இதில், புதிய 249 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த பைக்கில், யூ.எஸ்.டி., போர்க் மற்றும் அட்ஜஸ்டபில் சஸ்பென்ஷன்கள், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., கொண்ட டிஸ்க் பிரேக்குகள், 11.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் எடை, 167.7 கிலோவாக உள்ளது. ஒரே வகையில் வரும் இந்த பைக், இரண்டு நிறங்களில் கிடைகிறது.
விலை ரூ. 1.80 லட்சம்
எக்ஸ்பல்ஸ் 210
இந்த பைக், 200 சி.சி.,யில் இருந்து 210 சி.சி.,க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. 'கரிஷ்மா எக்ஸ்.எம்.ஆர்.,' பைக்கில் உள்ள 210 சி.சி., இன்ஜின், ட்யூன் செய்யப்பட்டு இதில் வழங்கப்பட்டுள்ளது. 4.2 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக், பேஸ் மற்றும் ப்ரோ என இரு வகையில் வந்துள்ளது.
விலை ரூ. 1.76 - 1.86 லட்சம்
மேலும்
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை
-
எக்ஸ் சமூக வலைதளத்தை தனக்குத்தானே விற்றார் எலான் மஸ்க்!
-
தொகுதி மறுசீரமைப்பின் மூலம் நெரிக்கப்படும் குரல்; முதல்வர் ஸ்டாலின்
-
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பிரிவுகளில் வழக்கு
-
முகாமில் அகதிகளை பட்டினி போட்ட ஒப்பந்ததாரர்; சமரசம் செய்த அதிகாரிகள்
-
நான்கு சுவர்களுக்குள் கட்சி நடத்தும் விஜய்: அ.தி.மு.க., விமர்சனம்